அசத்தல் அறிவிப்பு! அனைவருக்கும் வீடு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி!

அசத்தல் அறிவிப்பு! அனைவருக்கும் வீடு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி!

Update: 2021-01-18 08:42 GMT

தமிழகத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் நேற்று அ.தி.மு.க. வினரால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதே போன்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதன் பின்னர் சென்னை அசோக் நகரில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது எந்த பணியையும் செய்யவில்லை. தற்போது வேண்டும் என்றே அ.தி.மு.க. வின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்து வருகிறார்.

நீட் தேர்வு ரத்து செய்யுமாறு ஸ்டாலின் மனு கொடுக்கிறார். அதனைக் கொண்டு வந்தது தி.மு.க. தான். மக்களை குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின். மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. அரசு வீடு கட்டித்தரும். வருகின்ற 5 ஆண்டுகளில் வீடு இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News