சொத்து வரி 6% உயர்வா... அரசாணை கூறியது என்ன... அச்சத்தில் பொதுமக்கள்!

அரசாணையில் குறிப்பிட்டது போல சொத்து வரி விரைவில் உயர இருக்கிறதா?

Update: 2023-04-11 03:52 GMT

தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் இருக்கிறது. இவற்றில் கடந்த 1998 ஆம் ஆண்டு கடைசியாக சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை சொத்து வரை உயர்த்துவது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது வரை சொத்துவரி உயர்த்தப்படாமல் தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.


அது குறித்து தற்போது அரசாணை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள் ஒருவேளை சொத்து வரி உயர்த்தப்படும் என்ற ஒரு பயத்திலும் இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்நிலையில் விலைவாசி உயர்வு பணியாளர்களின் ஊதியம் உயர்வு பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதல் செலவு செய்யப்படுகிறது என்றும் காரணத்தை தி.மு.க அரசு செல்கிறது. எனவே தொடர்ச்சியாக சொத்து வரி உயர்த்தப்படும்.


25 சதவீதம், 50%, 75 சதவீதம், 100% என்று நான்கு வரிகளாக சொத்து வரி உயர்த்தப்பட்டது. காலி பணிகளுக்கு சொத்து வரி நூறு சதவீதம், ஒவ்வொரு ஆண்டும் 6% சொத்து வரி உயர்த்தப்படும் என்று அரசாணியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படுமா? என்று கேள்வி எழுந்து இருக்கிறது. எனவே சொத்து வரி உயர்த்தினால் வீட்டு வாடகை வரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Malaimalar

Tags:    

Similar News