"சாமி கூடத்தான் டிரஸ்ஸே போடுறது இல்ல"- சிலையிடம் கூட வக்கிரத்தைக் காட்டிய கமல்ஹாசன்.!

"சாமி கூடத்தான் டிரஸ்ஸே போடுறது இல்ல"- சிலையிடம் கூட வக்கிரத்தைக் காட்டிய கமல்ஹாசன்.!

Update: 2020-12-24 07:43 GMT

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ஒரு கூட்டத்தில் பெண்களிடையே பேசும் போது, "சாமி கூடத்தான் ஆடையில்லாமல் இருக்கிறது. அங்கே தோன்றாதது பெண்களைப் பார்த்து தோன்றுகிறதா?" என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

 

பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் தனது கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் பேசும் சாக்கில் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் கமல் பேசியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "பெண்கள் மத்தியில் பேச எனக்கு எப்போதுமே கூச்சம் இருக்காது" என்று தனது இயல்பை வெளிக்காட்டி பேசிய கமல், "இன்று பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைக்குக் காரணம்..இன்று நடக்கும் பாலியல் பலாத்காரங்களுக்குக் காரணம்..அரைகுறை துணி போடுவதால் மனம் கெட்டு விடுவதாகச் சொல்கிறார்கள்" என்று பேசி இருக்கிறார்.

Full View

இவ்வாறு கூறுபவர்களை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று, "சாமி கூடத் தான் கம்மியா டிரஸ் போட்டிருக்கு. சில சாமி டிரஸ்ஸே போடுறது இல்ல. அப்ப தோணாதது எங்க அக்காவையும் என் தங்கச்சியையும் பாக்கும் போது எப்பிடி உனக்கு தோணுது" என்று நாக்கூசாமல் பேசி இருக்கிறார்‌. சில நாட்களுக்கு முன்பு தனக்கு தரப்பட்ட பூர்ண கும்ப மரியாதையை நிராகரித்து கமல் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

அது பற்றிய விமர்சனங்களே இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் இவ்வாறு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்‌. இதையடுத்து தனது தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம் இன்றி வாழ்ந்த கமல் சிலைகளைக் கூட ஆபாசமாகப் பார்ப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் புன்னகை மன்னன் படத்தில் நடித்த போது தன்னிடம் தெரிவிக்காமல், தனது அனுமதி இல்லாமல் கமல் தன்னை முத்தமிட்டதாக நடிகை ரேகா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

படங்களில் ஆபாசமாக வசனங்கள் பேசி, நடித்து பெண்களை போகப் பொருளாகக் காட்டிய கமல் இவ்வாறு பேசுவது தான் ஆச்சரியம் அளிக்கிறது என்றும் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலான காட்சிகள் அடங்கிய பிக்பாஸ் தொடரை பணத்துக்காக நடத்தும் கமலுக்கு இதைப் பற்றி எல்லாம் என்ன தெரியும் என்று விமர்சிக்கும் சிலர் அவரது கிறிஸ்தவ தொடர்பையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 

திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் முன்னர் கிறிஸ்தவ கலை மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் பணியாற்றிய கமல், அதன் ஒரு பகுதியாக தான் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியதாகவும், தனது மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து கிறிஸ்தவ மதத்தின் மேல் தனக்கு ஈர்ப்பு தோன்றியதாகவும் கடந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டு இருந்தார். 

 

தான் கிறிஸ்தவ கலை மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் இணைந்த பின்னர் 'நற்செய்தியை' பரப்பியதாக பத்திரிகையாளர் கரண் தப்பருக்கு வழங்கிய பேட்டியிலும் அவர் தயக்கமின்றி குறிப்பிட்டு இருந்தார். இன்று 28 ஆண்டுகள் கழித்து கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், தங்களது தவறான உறவைக் கண்ணால் பார்த்த ஒரு காரணத்துக்காக அவரை அடித்துக் கொன்ற பாதிரியாருக்கும் கன்னியாஸ்திரிக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது.

 

இந்த வழக்கில் பாதிரியார் சிக்காமல் இருக்க சர்ச் தனது பண மற்றும் அதிகார பலத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்பது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தலைமுடி உட்பட உடல் முழுதும் மறைத்து உடை அணிந்திருக்கும் கன்னியாஸ்திரியைப் பார்த்து பாதிரியாருக்கு எப்படி அப்படித் தோன்றி இருக்க முடியும் என்று கேட்காத கமல், சுவாமி சிலையை ஆபாசமாக பார்க்கிறார். ஒரு வேளை இந்த வழக்கு மீதான மீடியா லைம்லைட்டை திருப்பத் தான் கமல் இவ்வாறு பேசினாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

Similar News