கும்பகோணத்தில் திருடப்பட்ட பார்வதி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

Update: 2022-08-08 04:55 GMT

12-ம் நூற்றாண்டை சேர்ந்த் பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கும்பகோணம் அருகே காணாமல் போன பார்வதி சிலை தற்போது அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாண்டதோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் சிலை போன் ஹவுஸ் ஏல இல்லத்தில் உள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.சிலையை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட ஐந்து பஞ்சலோக சிலைகளில் பார்வதி சிலையும் ஒன்று. 1971 ஆம் ஆண்டு இந்த சிலைகள் காணாமல் போனதாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு வாசு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 53 வருடத்திற்கு பிறகு பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Input from: SunNews

Similar News