நலமுடனும், மகிழ்ச்சியுடன் பெற்று விளங்கட்டும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: விடியும் 2022 புத்தாண்டையொட்டி தமிழகத்தை சேர்ந்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாநில மக்கள், புதிய நம்பிக்கைகளும், அளவு கடந்த மகிழ்ச்சியும், சிறப்பான வளமும் பெற்று திகழட்டும். அனைவரும் மிக்க நலமுடனும், நல்லிணக்கத்துடனும் விளங்கட்டும். நமது தாய் திருநாட்டை உன்னத நிலைக்கு கொண்டு செல்வதற்கான உறுதியான நிலைப்பாட்டை எடுப்போம். அனைவருக்கும் இறைவன் நல்லாசி வழங்குவாராக என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: The New Indian Express