"மீனவர்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" தூத்துக்குடியில் கவர்னர்!

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று தூத்துக்குடியில் உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் மீனவர்களில் பெரும்பாலானோர் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு வர வேண்டும். மீனவ இளைஞர்களை மத்திய அரசு கடலோர காவல் படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்று கூறினார்.
மேலும் மீனவர்களிடம் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர்களிடமே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் கேட்டிருந்தேன் அவை அனைத்தையும் மத்திய மாநில அரசுகளிடமும் சமர்ப்பித்து உள்ளேன்! நான் இன்று உங்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கிறேன் மீனவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் நான் முடித்துக் கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.
பெரிய கடல் எல்லைகளைக் கொண்டதே நமது இந்திய தேசம் அதனால் மரைன் போலீஸில் மீனவ இளைஞர்கள் பங்கு பெற வேண்டும். ஏனென்றால் கடலை பாதுகாப்பது என்பது அனைவராலும் முடியாது ஒன்று! பின்னடைவிலே மீனவ சமுதாயம் இருக்கிறது, அவர்களுக்கென்று இன்னும் பல திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் கூடிய விரைவில் கடல் பாதுகாப்பு படையில் மீனவ இளைஞர்களை சேர்க்கும் பணியை மத்திய அரசு தொடங்கும் என்று தெரிவித்தார்.
Source : Dinamalar