பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் - பரந்தூரில் போராட்டத்தில் மக்கள்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
சென்னை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளர்ந்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4,250 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தங்கள் பகுதியில் விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் கையகப்படுத்தி அகற்றிவிட்டு புதிய விமான நிலைய அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.