ஜல்ஜீவன் திட்டம் - தமிழ்நாட்டில் 28 லட்சத்து 48 ஆயிரம் ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு!

Update: 2022-07-25 01:53 GMT

ஜல்சக்தி இயக்கம்-I திட்டம், 2019-ல், 1592 வட்டாரங்களில், நாட்டின் 256 வறட்சியான மாவட்டங்களில், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 5 திட்டங்களை துரிதமாக செயல்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது.

நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, பாரம்பரிய மற்றும் பிற நீர் நிலைகளை புதுப்பித்தல், நீரை மறுசுழற்சி செய்தல், நீர்நிலைகள் மேம்பாடு மற்றும் தீவிர காடு வளர்ப்பு மேலும் வட்டார மற்றும் மாவட்ட நீர் பாதுகாப்புத் திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துதல், க்ரிஷி அறிவியல் கேந்திரா திட்டங்கள், நகர்ப்புற கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் அனைத்து கிராமங்களையும் முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் கண்காணித்தல் ஆகியவை அடங்கும்.

பின்னர் ஜல் சக்தி இயக்கம் 2019-ல் விரிவுப்படுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்களையும் உள்ளடக்கியதாக விரிவுப்படுத்தப்பட்டது.

நாட்டில் 2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த இயக்கம் அறிவிக்கப்பட்ட போது இருந்த 18.93 கோடி ஊரகப்பகுதி வீடுகளில் கடந்த 35 மாதங்களில் 6.57 கோடி வீடுகளுக்கு (34.32%) குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்தமுள்ள 19.15 கோடி வீடுகளில் 9.81 கோடி வீடுகளுக்கு (51.22%) குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 19 லட்சத்து 15 ஆயிரம் ஊரகப்பகுதி வீடுகளில் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு செயல்திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் 28 லட்சத்து 48 ஆயிரம் ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

InputFrom: TheBusinessLine 

Similar News