சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி - பா.ஜ.க'வினருடன் போட்டி போட்டுகொண்டு பிரதமரை வரவேற்ற தி.மு.க'வினர்
ஹைதராபாத்தில் இருந்து தனி விமான நிலையம் மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமரை வரவேற்க அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனைவரும் விமான நிலையம் வந்தனர்.
ரூ.31.400 கோடி மதிப்பில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்க சென்னையில் விமான நிலையம் முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் இருக்கும் பகுதி வரை பாஜகவினர் வரவேற்க திரண்டுள்ளனர். பிரதமரை வரவேற்க அமைச்சர்கள் விமான நிலையம் சென்றுள்ளனர்.
சென்னை ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.