ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தலைவர் ராமகிருஷ்ணனை துளியும் கர்வம் இல்லாமல் கனிவாக விசாரித்த பிரதமர் மோடி

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ணன் கழுத்துக்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல்படாத நிலையில் இவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே

Update: 2022-07-30 08:36 GMT

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ணன் கழுத்துக்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல்படாத நிலையில் இவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார் .

கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது .இதே பாதிப்புக்கு உள்ளான அமர்சேவா சங்கத்தின் செயலாளர் சங்கர்ராமனும் ராம கிருஷ்ணனுடன் சேர்ந்து சமூக பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவரது சேவையை பாராட்டும் விதமாக சென்னை வந்த நரேந்திர மோடி, அவர்ளை கவர்னர் மாளிகையில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதேபோன்றே எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டேவிடமும் பிரதமர் நரேந்திரமோடி நலம் விசாரித்தார்.


Source - Daily Thanthi

Similar News