மக்கள் பாதை அமைப்பில் இருந்து சகாயம் நீக்கம்.. காரணம் இதுதானாம்.!

மக்கள் பாதை அமைப்பில் இருந்து சகாயம் நீக்கம்.. காரணம் இதுதானாம்.!

Update: 2021-01-09 18:13 GMT

மாவட்ட ஆட்சியராகவும், மாநில அரசு உயர் பதவியில் சகாயம் பதவி வகித்து வந்தார். அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும்பொழுது கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதன் பின்னர் அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.

இதனிடையே தன்னுடைய பதவி காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு பணியிலிருந்து விடுக்கப்பட்டார். இதன் பின்னர் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பும்போது, தான் சமுதாய பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கெனவே மக்கள் பாதை என்ற அமைப்பின் வழிகாட்டுதல் பொறுப்பில் சகாயம் இருந்து வந்தார்.

இந்நிலையில், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டுதல் பொறுப்பில் இருந்து சகாயத்தை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி அறிவித்துள்ளார். மேலும், மக்கள் பாதை அமைப்பை சகாயம்தான் நடத்தினார். ஆனால் அவர் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். மக்கள் பாதை அமைப்பின் அடையாளங்களை சகாயம் இனி எங்கும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் சகாயம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு வேளை மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தது. அதன் காரணமாகத்தான் சகாயத்தை மக்கள் பாதை அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்ற தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.

Similar News