சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு! என்ன நடக்கிறது சிறையில்?

சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு! என்ன நடக்கிறது சிறையில்?

Update: 2021-01-20 16:52 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வருகின்ற 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

சசிகலா வெளியில் வருவதையொட்டி அ.ம.மு.கவினர் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக பெங்களூரு மற்றும் ஓசூர் நகரங்களில் உள்ள அனைத்து ஓட்டல்களையும் முன்பதிவு செய்துள்ளனர்.

ஓசூர் முதல் சென்னை வரை தொண்டர்கள் அணிவகுத்து சசிகலாவை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டனர். இந்நிலையில், சசிகலாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் அ.ம.மு.கவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அவருக்கு வயது 70 கடந்து விட்டநிலையில், தற்போது உடல்நலக்குறைவு என்பது அனைவரிடத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News