அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்.. தமிழக அரசு.!
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்.. தமிழக அரசு.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.