100 ஏரிகளுக்கு உபரிநீர் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.!
100 ஏரிகளுக்கு உபரிநீர் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.!
மேட்டூர் அணையில் இருந்து வெறியேறும் உபரிநீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு ரூ.5,65 கோடி மதிப்பிலான நீரேற்றும் திட்ட பணிகளை கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று காலை மேட்டூர் அணை திப்பம்பட்டியில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, 100 ஏரிகளுக்கு உபரி நீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி 48 கிராமங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.