தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழகம் வந்தது துணை ராணுவப்படை.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் பாதுகாப்பு பணிகளுக்காக 1300 துணை ராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் பாதுகாப்பு பணிகளுக்காக 1300 துணை ராணுவ படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
தமிழகம், கேரளா, புதுவை உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தேதி அறிவித்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டது.
இதனால் தேர்தல் ஆணையம் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. தொலைக்காட்சி விளம்பரம், பத்திரிகை உள்ளிட்டவை ஆராய்வதற்காக மாவட்டம் தோறும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவப்படையினரை தேர்தல் ஆணையம் வரவழைத்துள்ளது. அதனடிப்படையில், மணிப்பூர் மாநிலம் அகர்த்தாவில் இருந்து 18 பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயிலில், சுமார் 1300க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவரும் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுவார்கள். இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.