இடைக்கால பட்ஜெட் சிறப்பாக உள்ளது.. தொழிற்சங்கங்கள் கருத்து.!

இடைக்கால பட்ஜெட் சிறப்பாக உள்ளது.. தொழிற்சங்கங்கள் கருத்து.!

Update: 2021-02-23 18:11 GMT

தமிழக இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.

கல்வி, மற்றும் சுகாதாரம், குடிநீர் போன்றவைகளுக்கு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்தார். அது மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி நலனுக்காகவும் ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக இடைக்கால பட்ஜெட்டில் உள்ள பல்வேறு அறிவிப்புகளை கொடிசியா மற்றும் காட்மா தொழில் அமைப்புகள் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏராளமான திட்டங்களுக்கு நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளது.
 

Similar News