சரியான சமயத்தில் அனுமதி வழங்காத தி.மு.க. அரசு: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை நோக்கி சென்ற ரூ.6000 கோடி முதலீடு!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 மாதங்கள் முடிவடைந்துள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்திற்கு வரக்கூடிய முதலீடுகளை சரியான முறையில் ஈர்க்க முடியாமல் அண்டை மாநிலங்களுக்கு சென்று வருகிறது.

Update: 2022-01-06 14:17 GMT

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 8 மாதங்கள் முடிவடைந்துள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்திற்கு வரக்கூடிய முதலீடுகளை சரியான முறையில் ஈர்க்க முடியாமல் அண்டை மாநிலங்களுக்கு சென்று வருகிறது.

அது போன்று கிரானைட் தொழிற்சாலைக்காக ரூ.6000 கோடி முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளது. ஆனால் தற்போதைய திமுக அரசு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கில நாளேடு ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நல்ல கிரானைட் கற்கள் இருப்பதாக தொழிலதிபர்கள் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இந்த தொழிற்சாலைகளை நடத்த வேண்டும் என்றால் நல்ல கற்கள் தேவைப்படுகிறது. தமிழகத்தில் நல்ல வளம் இருக்கிறது. அதற்கு திமுக அரசு அனுமதி வழங்க வேண்டும். அப்படி வழங்காத பட்சத்திற்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் முதலீட்டை ஈர்த்துக்கொள்ளும் என தொழிலதிபர்கள் கூறியுள்ளனர். இதனை செவிகொடுத்து கேட்காததால் சுமார் ரூ.6,000 மதிப்பிலான முதலீட்டை திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநிலம் ராஜஸ்தானுக்கு கைமாறியுள்ளது. தமிழகத்திற்கு அந்த முதலீடு ஈர்க்கப்படும் பட்சத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். இதனை அரசு சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

Source: The Hindu

Image Courtesy: Hindustan Times

Tags:    

Similar News