தங்கத்தின் விலை இன்று ரூ.288 குறைவு: சந்தோஷத்தில் நகை விரும்பிகள்.!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.288 குறைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்குபவர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

Update: 2021-03-05 05:49 GMT

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூ.288 குறைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்குபவர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

இந்நிலையில், நகை விரும்பிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று (மார்ச் 5ம் தேதி) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,181 ஆகக் உள்ளது. நேற்று இதன் விலை 4,227 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்துள்ளது.




 


அதேபோன்று 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 288 ரூபாய் குறைந்து 33,448 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.




 


கொரோனா பரவல் காரணமாக முடங்கியிருந்த தொழில் நிறுவனங்கள் பழைய மாதிரி மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் தற்போது மீண்டும் தொழில்துறையில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News