தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.!

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.!

Update: 2021-01-21 19:24 GMT

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி கண்டுப்பிடித்தாலும் தொற்று பாதிப்பு இன்னும் குறைந்த பாடில்லை. தினமும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு கொண்டே இருக்கிறது. தற்போது தமிழகத்தில் தினமும் 50 முதல் 700 பேர் வரைக்கும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 366 பேர் ஆண்கள், 230 பேர் பெண்கள் ஆவார்கள். 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News