'மோடியின் கவிதை தொகுப்பில் எந்தவிதமான வாதமும் இல்லை' - வைரமுத்துவின் பல்டி

'மோடியின் கவிதை தொகுப்பில் எந்தவிதமான வாதமும் இல்லை' என வைரமுத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-07-15 05:41 GMT

'மோடியின் கவிதை தொகுப்பில் எந்தவிதமான வாதமும் இல்லை' என வைரமுத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் பிரதமர் மோடியை வைரமுத்து புகழ்ந்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியது, வழக்கமாக தி.மு.க புகழ் பாடும் வைரமுத்து ஏன் பிரதமர் மோடியை பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என தி.மு.க சார்பிலும், பிரதமர் மோடி புகழ்ந்து பேசுவதற்கு பதவிது ஆசைதான் வைரமுத்துவை பாடாய்படுத்துகிறது என தி.மு.க அல்லாத மற்ற தரப்பிலும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தனியா தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த வைரமுத்து அதனைப் பற்றி விளக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது, 'வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் அவரது கவிதையை தொகுப்பை வெளியிட நான் சென்றிருந்தேன். அப்பொழுது வாஜ்பாய் உடன் கலைஞர் கூட்டணியில் இருந்தார், பா.ஜ.க'வும், தி.மு.க'வும் கூட்டணியில் இருந்த காலம் அதனால் நான் வாஜ்பாய் நிகழ்சியில் பங்கேற்றத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


ஆனால் மோடியின் கவிதை தொகுப்பு விழாவில் நான் கலந்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, வாஜ்பாயோடு நீங்கள் மோடியை ஒப்பிட கூடாது என சிலர் தமிழ் தீவிரவாதிகள் என்னிடம் வந்து சொன்னார்கள்.

மேலும் மோடியின் கவிதை தொகுப்பை வாங்கி படித்தபோது கவிதைகள் நன்றாக இருந்தன எந்தவித மதவாதமும் இல்லை' எனக் கூறி விளக்கம் அளித்தார்.


Source - News 18 Tamil Nadu

Similar News