டெலிவரி "பாய்" என்பதை, டெலிவரி "இந்து" என அழைக்க வேண்டுமா? அர்ஜூன் சம்பத் பெயரில் தொடர்ந்து பரவும் விஷம பதிவுகள்!

அர்ஜூன் சம்பத் பெயரில் தொடர்ந்து பரவும் விஷம பதிவுகள்;

Update: 2022-04-13 00:45 GMT

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ட்வீட் என்ற பெயரில் தொடர்ந்து போலி செய்திகள் பரப்பப்படுகிறது. அதனையும் உண்மை என்று நம்பி ஒரு தரப்பினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். 

சமீபத்தில், வீட்டுக்கு பொருட்கள் கொண்டு வார எல்லாரையும் இனிமே டெலிவரி 'பாய்'னு சொல்லத் தடை விதிக்கனும். டெலிவரி 'இந்து'னு தான் சொல்லனும் - அர்ஜூன் சம்பத்" என்ற டிவீட் வைரலானது. 



இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பெயரில் போலியாக ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கி விஷமத்தனமான ட்வீட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதை அர்ஜூன் சம்பத்தான் கூறினார் என்று கருதி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அர்ஜூன் சம்பத் பெயரில் தொடங்கப்பட்ட போலியான ட்விட்டர் பக்கத்தில் அர்ஜூன் சம்பத்தை கிண்டல், நையாண்டி செய்யும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரும் போது, பலரும் அது உண்மை என்று எண்ணி பகிர்வதைக் காண முடிந்தது.

@Arjun_sampath_ என்ற பெயரில் அந்த ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டிருந்தது. அர்ஜூன் சம்பத் படம் எடிட் செய்யப்பட்டு அவருக்கு கண்ணாடி, மீசை, தாடி வைக்கப்பட்டிருந்தது. 

அர்ஜூன் சம்பத்தின் ட்விட்டர் பக்கம் @imkarjunsampath என்பதே உண்மையானதாகும். 



 

 


Similar News