தஞ்சாவூரில் முகமது சலீம் சொன்ன பேச்சைக்கேட்டு, கணவர் உயிர் பிழைக்க பேத்தியை பலி கொடுத்த பாட்டி ஷர்மிளாபேகம்!
grandmother-who-killed-granddaughter-near-peravurani
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆறு மாத பெண் குழந்தை தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சொந்த பாட்டியே மூடநம்பிக்கையால் பேத்தியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆறு மாத பெண் குழந்தை இறந்துகிடந்தது. நீர் நிறைந்த மீன் தொட்டியில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கணவர் உடல் நலம் பெற வேண்டி, பாட்டியே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் என்பவரது 6 மாத பெண் குழந்தை ஹாஜரா அவரது வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டது. மீன் வைக்கும் நீர் நிறைந்த பிளாஸ்டிக் தொட்டியில் குழந்தை சந்தேகமான முறையில் இறந்து கிடந்தது. உடனே அவசர அவசரமாக இறந்த குழந்தை மல்லிப்பட்டினம் ஜமாஅத்துக்கு உள்பட்ட முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையிடம் புகார் செய்ததன் பேரில் காவலர்கள் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பாட்டியே பேத்தியைக் கொன்றது அம்பலமாகியுள்ளது.
கணவர் உயிரை காப்பாற்ற செய்த காரியம்
நசுருதீனின் சின்னம்மா ஷர்மிளாபேகத்தின் கணவர் அஸாருதீன் வெளிநாட்டில்வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதிலிருந்து அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாராம். இதனால் குறிசொல்லும் முகமது சலீம் என்பவரிடம் ஷர்மிளா பேகம் சில நாள்களுக்கு முன்பு குறிபார்த்துள்ளார். உனது கணவர் உடல்நலம் குணமடைய உயிர்ப்பலி கொடுக்கவேண்டுமென அவர் கூறியுள்ளார். இதனால் தமது வீட்டுக்கு அருகில் உள்ள அக்கா மகன் நசுருதீன் குழந்தை ஹாஜராவை நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள மீன்தொட்டியில் அமுக்கி பலி கொடுத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். குழந்தையின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு உடற்கூராய்வு நடைபெற்றது. ஷர்மிளா பேகம், அவரது கணவர் அஸாருதீன், குறிசொல்லும் முகமது சலீம் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்.