முனியப்பன் சிலையை பெட்ரோல் ஊத்தி கொளுத்திய மர்ம நபர்கள் - பக்தர்கள் கண்ணீர்!

Update: 2021-04-25 07:01 GMT

பென்னாகரத்தில் கோவில் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பென்னகரம் பகுதியில் பெலாமலை முனியப்பன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலுக்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் பெலாமலை முனியப்பன் சிலைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊத்தி கொளுத்தியுள்ளனர்.

மறுநாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முனியப்பன் சிலை தீ வைத்து கொளுத்தப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலுக்கு இரவு நேரத்தில் சரியான வெளிச்சம் இருக்காது என்றும் இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் இங்கு வந்து கோவில் சிலைக்கு தீ வைத்து உள்ளதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த பெலாமலை முனியப்பன் கோவிலுக்கு போதிய மின்விளக்குகள் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு எதற்காக மர்ம நபர்கள் தீ வைத்தனர் என்பது குறித்து இதுவரை தெரியாமல் இருக்கும் நிலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினால் அவர்கள் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முடியும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் மதமாற்று சக்திகள் இதுபோன்று சிலைகளை உடைப்பது, கோவிலுக்கு தீ வைப்பது மற்றும் கோவில் நிலத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இதுபோல குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டம் இயற்றி தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே இந்து கோவில் வரலாற்றை நாம் பாதுகாக்க முடியும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு கடுமையான சட்டங்கள் இயற்றப்படாவிட்டால் இன்னும் 50 ஆண்டுகளில் இந்து கோவில்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

Similar News