காஞ்சி சிவன் கோவில் படிக்கட்டை பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை - நடவடிக்கை எடுக்கப்படுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற ஆனந்தருத்ரேஸ்வரர் கோவில் படிக்கட்டுகள் உடைந்து காணப்படுவதால் உடனே படிக்கட்டுகளை சீரமைத்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் என்னும் பகுதியில் ஆனந்தருத்ரேஸ்வரர் கோவில் என்ற புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் இறைவர் ஆனந்த ருத்ரேசர் எனும் திருமூர்த்தியாவார். மூலவர் சிவலிங்க மூர்த்தம். இக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வீரபாகு, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. இக்கோயில் இறைவன் ருத்ரேசரின் மீது சிவஞான யோகிகள் பாடிய நூல் கச்சி ஆனந்தருத்திரேசர் என்னும் பதிகமாகும்.
இந்த கோவிலுக்கு சொந்தமாக கோவில் அருகே கோவில் குளம் ஒன்று உள்ளது. இந்த கோவில் குளம் படிக்கட்டுகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்தக் கோவில் படிக்கட்டுகளை சீரமைத்த தருமாறு இந்து அறநிலையத் துறையிடம் அப்பகுதி பக்தர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பக்தர்களின் கோரிக்கையை செவி சாய்க்காத இந்து அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இந்த கோவில் முக்கிய சிவன் கோவில் என்பதால் கோவில் முழுவதும் சுத்தமாக இருந்தாலும் கோவில் படிக்கட்டுகள் மட்டும் உடைந்து இருப்பதால் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கோவிலில் சிறப்பை பாதுகாப்பதற்காக கோவில் குளத்தில் உள்ள படிக்கட்டுகளை உடனடியாக அறநிலையத்துறை சரி செய்து தரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இந்த சிவன் கோவில் படிக்கட்டுகளை உடனடியாக அறநிலையத்துறை சீர் செய்து தரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.