ஈரான்-இஸ்ரேல் பதற்றம்!! இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள்!!
இஸ்ரேல்-அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவில் வன்முறை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் ஆதரவு தீவிர பேச்சாளர்களை கண்காணிக்கவும், சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் உள்ளடக்கங்களை தடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததை அடுத்து, காஷ்மீரில் ஷியா பிரிவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, மத்திய அரசின் அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெற்று வருகிறது.