வந்துட்டோம்னு சொல்லு..தமிழகத்தில் பாஜகவின் முதல் வெற்றியைப் பதிவு செய்த எம்.ஆர்.காந்தி!
தமிழகத்தில் தாமரை மலர சான்சே இல்லை என்று தலைகீழாய் நின்ற உடன்பிறப்புகளின் முகத்தில் இருபது ஆண்டுகளுக்குப் பின், அதுவும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்று கரியைம் பூசி இருக்கிறார் இந்து ஆர்வலரும் பாஜக வேட்பாளருமான திரு.எம்.ஆர்.காந்தி.
கன்னியாகுமரிக்கு அடுத்து அதிக வாக்காளர்களைக் கொண்ட நாகர்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 106 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நாடார் வாக்குகள், அதிலும் கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம். எனவே வெற்றி, தோல்வியை மத அடிப்படையிலான வாக்குகளே நிர்ணயிப்பது வழக்கம். இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை களமிறக்கி இருந்த நிலையில் அவரை விட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
1984ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி ஐயா அப்போது வெறும் 589 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட போதும் அப்போதும் வெற்றிக் கனியைப் பறிக்க இயலவில்லை. ஆனால் திமுக அலை அடிக்கிறது என்று கணிக்கப்பட்ட இந்த சட்டசபைத் தேர்தலில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜகவுக்கு ஐயா எம்.ஆர்.காந்தி வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
தாமரை மலர்ந்தே தீரும் என்ற முன்னாள் இன்னாள் தமிழக பாஜக தலைவர்களின் சூளுரையை நிறைவேற்றி தமிழகத்தில் பாஜகவின் முதல் அடியை எடுத்து வைத்து அடுத்த கட்டப் போருக்கு தயாராக பிள்ளையார் சுழி போட்டிருக்கும் எம்.ஆர்.காந்திக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்துக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதில் முதல் ஆளாக இருக்கும் எம்.ஆர்.காந்தி ஐயா சட்டசபையிலும் அதைத் தொடர்வார் என்றும் நாகர்கோவில் தொகுதிக்கு பல வளர்ச்சிப் பணிகளைக் கொண்டு வருவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.