கொரோனா சாதனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை பாகுபாடின்றி நிறுவனங்களுக்கு வழங்கிய அணுசக்தித் துறை!

Update: 2021-05-08 03:34 GMT

கொரோனா தொடர்பான சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும் வழங்கி, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாபா அணுசக்தி மையம் மற்றும் அணுசக்தித் துறை ஆகியவை துணை நிற்கின்றன. பிபிஇ கவச உடைகளை கோபால்ட் மூலம் சுத்தம் செய்யும் நெறிமுறை உருவாக்கம், பிபிஇ உடைகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ளது.

இதே போல், ஹெபா பில்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்-99 முககவசங்கள் உருவாக்கப்பட்டன. என்-99 முககவசங்கள் என்-95 முகக்கவசத்தை விட சிறந்தது என்று 3 பரிசோதனைக் கூடங்கள் சான்று அளித்துள்ளன. இவற்றை அதிக அளவில் உற்பத்தி் செய்ய இதன் தொழில்நுட்பம், பிற நிறுவனங்களுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி-பிசிஆர் பரிசோதனைக்கான உதிரி பாகங்களையும் அணுசக்தித் துறை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

அதோடு ரெஸ்பிரேட்டர், ரீபர், மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான சிறிய அளவிலான பிளாஸ்மா தொற்று நீக்கக் கருவி மற்றும் பிளாஸ்மா எரியூட்டும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அணுசக்தித் துறை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

கொரோனா தீவிரத்துக்கு மரபணு பாதிப்பைத் தீர்மானிக்க கண்காணிப்பு ஆய்வை டாடா நினைவு மருத்துவமனையுடன் இணைந்து மேற்கொள்வதாகவும், இது உலகில் நடைபெறும் தனித்துவமான ஆய்வு என்றும் இதன் முடிவுகள் விரைவில் உலகளாவிய விஞ்ஞானிகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது. 

Similar News