அடுத்த மாநில அரசியல்வாதிகளிடம் அசிங்கப்படும் தி.மு.க - தமிழகத்தின் மானத்தை வாங்கும் பத்திரிகையாளர்கள்..!

Update: 2021-06-01 09:38 GMT

இந்தியாவிலேயே PPE அணிந்துகொண்டு கொரோனா நோயாளிகளை சந்தித்த முதல் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதை AIMIM கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி மறுத்துள்ளார்.












தமிழக முதலமைச்சர் நேற்று முன்தினம் கோவை பயணம் மேற்கொண்டு அங்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை பார்வையிட்டார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் #Gobackstalin என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் அதனை திசை திருப்புவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்தனர்.

இறுதியாக கொரோனா நோயாளிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் செல்வதற்கு முன்னர் PPE உடை எனப்படும் கவச உடை அணிவதை பெரிதுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சர் ஒருவர் PPE உடை அணிந்து கொரோனா நோயாளிகளை சந்தித்தார் என்று செய்திகளை வெளியிட்டனர்.

இதை கண்ட கோவா,தெலுங்கானா, சிக்கிம், உத்திர பிரதேஷ் மற்றும் பாண்டிச்சேரி மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் இந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் கொரனா நோயாளிகளை கவச உடை அணிந்து சென்று அருகில் நின்று பார்வையிட்டுள்ளனர். இதனால் வீண் விளம்பரம் தேடிக்கொள்ளும் திமுகவினரின் முகத்திரை கிழிந்தது.

பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின்(AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தான் இந்தியாவிலேயே கவச உடை அணிந்து கொண்டு கொரோனா நோயாளிகளை சந்தித்த முதல் முதல்வர் என்று உபி ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டு பத்திரிகையாளர் சாம் டேனியலுக்கு பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஓவைசி, "இந்தியாவில் முதல் முறையாக கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை ஹைதராபாத் மற்றும் வாரங்கல் மருத்துவமனைகளில் நேரில் சென்று சந்தித்த முதல் முதலமைச்சர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தான் "என்று பதிவிட்டுள்ளார். விளம்பரம் தேடிக் கொள்ளும் ஆசையில் ஓவர் பில்டப் கொடுத்து அடுத்த மாநில அரசியல்வாதிகளிடம் கூட திமுகவினர் அவமானப்பட்டு வருகின்றனர்.

Similar News