சுயசார்பு இந்தியாவை அடைய இளைஞர்களுக்கு நம்பிக்கை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்!

Update: 2021-03-03 11:11 GMT

நாடு சுயசார்பு அடைய உதவுவதில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி இன்று விவாதித்தார். "ஆத்மனிர்பர் பாரத்தை கட்டியெழுப்ப, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பது முக்கியம். இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி, திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கும்போது தான் தன்னம்பிக்கை வரும்" என்று பிரதமர் மோடி கல்வித்துறைக்கான இந்த ஆண்டு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஒரு கருத்தரங்கில் கூறினார்.


 புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு மொழியின் நிபுணர்களின் பொறுப்பு, உலகின் சிறந்த உள்ளடக்கம் எவ்வாறு இந்திய மொழிகளில் கிடைக்க வேண்டும் என்பது பற்றியதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கருத்தரங்கு குறித்து தெரிவித்தார்.



"மார்ச் 3'ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ஆத்மனிர்பர் பாரத்துக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றைப் பற்றிய தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ஆத்மனிர்பர் பாரத் என்ற பெயரிடப்பட்ட மத்திய அரசின் திட்டத்தில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட கல்வி கொள்கைகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றின் தாக்கம் குறித்து பிரதமர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News