மனைவி வீட்டில் இருக்கும்போதே கள்ளக்காதலியுடன் தகாத உறவில் ஈடுபட்டதுடன் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மதபோதகர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த பெண்ணிற்கும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மத போதகரான பால் சாமுவேல் தாமஸ் என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மதபோதகர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் சீர் வரிசைகள் வாங்கியுள்ளார். அவை போதாது என்று தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் 26 வயதுடைய ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டு வேலை செய்வதற்காக பணியில் அமர்த்தியுள்ளார். பிறகு அந்த பெண்ணுடன் மதபோதகர் குடித்துவிட்டு மனைவி கண்ணெதிரே தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டி கேட்டதற்கு மனைவி என்று கூட பாராமல் அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி பிறகு கணவன் மனைவி இருவரும் இருக்கும் அந்தரங்க வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தன் மனைவியை மிரட்டி உள்ளார்.
எனவே அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் மதபோதகர் பால் சாமுவேல் தாமஸ் அந்தப் பெண்ணை கொடுமை படுத்தியது தெரியவந்தது. இதனால் வரதட்சனை கொடுமை மற்றும் ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மதபோதகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊருக்கு உபதேசம் செய்யும் இதுபோன்ற மதபோதகர்கள் தங்கள் வாழ்க்கையில் இது போன்ற பல தவறுகளை செய்து வருகின்றார்கள் என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.