புதிய வாகன கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு: பழைய வாகனங்களை இனி பயன்படுத்த முடியாதா?

Update: 2021-03-18 11:39 GMT

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாகன ஸ்கிரேப்பிங் கொள்கையை மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார். சபையில் பேசிய நிதின் கட்கரி, இந்த கொள்கை அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும் என்றும், மாசுபாட்டைக் குறைக்கும் மற்றும் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கும் திட்டமாக இருக்கும் என அறிவித்துள்ளார். இந்த கொள்கை நாட்டின் ஆட்டோமொபைல் தொழில் விற்றுமுதலை தற்போதைய ரூ .4.5 லட்சம் கோடியிலிருந்து ரூ 10 லட்சம் கோடியாக அதிகரிக்க வழிவகுக்கும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


 ஸ்கிராப்பிங் சான்றிதழை தயாரித்த பின்னர் புதிய வாகனம் வாங்குவோருக்கு ஐந்து சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஆட்டோமொபைல் நிறுவனங்களை கேட்டுள்ளதாக கட்கரி கூறினார். மத்திய பட்ஜெட்டில் 2021-22'இல் அறிவிக்கப்பட்ட இந்தக் கொள்கை, தனி நபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிட்னஸ் சோதனை செய்தால் போதும் என அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வணிக வாகனங்கள் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் பிட்னஸ் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். பிட்னஸ் சோதனையில் தோல்வியுற்ற அல்லது அதன் பதிவு சான்றிதழைப் புதுப்பிக்கத் தவறிய வாகனங்களை மீண்டும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பிட்னஸ் சான்றிதழ் பெறத் தவறினால் வர்த்தக வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.


 மேலும் புதிய வாகனங்களை வாங்க ஊக்கமளிக்கும் நடவடிக்கையாக, ஆரம்ப பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிட்னஸ் சான்றிதழ் மற்றும் பிட்னஸ் சோதனைக்கான கட்டணம் வணிக வாகனங்களுக்கு அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மற்றொரு அறிவிப்பாக, தனி நபருக்குச் சொந்தமான வாகனங்கள் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்டால் அல்லது பதிவு சான்றிதழை புதுப்பிக்கத் தவறினால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு ரத்து செய்யப்பட வேண்டும். இந்த வகை வாகனங்களுக்கும், ஆரம்ப பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறு பதிவு செய்வதற்கான கட்டணம் வணிக வாகனங்களுக்கு அதிகரிக்கப்பட்டத்தைப் போலவே அதிகரிக்கப்படும்.

Similar News