தபால் ஓட்டு வசதி சரியானதுதான் - எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி! அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்!

Update: 2021-03-19 01:45 GMT

வாக்குச் சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு வசதி தொடர்பான விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், 

வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத சில பிரிவினருக்கு விலக்கு அளித்து, அவர்களும் ஜனநாயக திருவிழாவான தேர்தலில் ஒருங்கிணைந்து பங்கேற்க, தபால் ஓட்டை பயன்படுத்த தேர்தல் ஆணையம் செய்துள்ள அனைத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். வாக்குச் சீட்டின் ரகசியத்தையும், நியாயமான தேர்தல்கள் நடத்துவதையும் பாராட்ட வேண்டும் என்று எஸ். ரக்பிகர் சிங் கில் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வாக்குச்சீட்டின் இரகசியத்தையோ அல்லது தேர்தல்களை நடத்துவதில் உள்ள நியாயத்தையோ சமரசம் செய்யாமல், இந்த செயல்முறை அனைத்தையும் உள்ளடக்கியதாக மாற்றினால், அது, அதை நடத்தும் அமைப்பான தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் ஒரு பெரிய காரணியாக இருக்கும் என்று ஒருவர் பணிவுடன் கூறலாம்.

1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளின்படி, தபால் ஓட்டு அளிக்க அனுமதிக்கப்பட்ட நபர்களின் வகைப்பாட்டில், எந்த விதிமுறைமீறலையும் இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.  

தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவது, தேர்தல் ஆணையத்தின் முழுமையான அதிகாரங்களுக்குள் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு ஜார்கண்ட் தேர்தலில் இருந்தே, சில பிரிவினருக்கு தபால் ஓட்டு முறையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட பிகார் பொது தேர்தல்களிலும், தபால் ஓட்டு வசதி, இந்த அனைத்து பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டது.

இதில் 52,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். எந்த வாக்காளரும் விடுபடாமல், அனைவரும் உள்ளடங்கிய தேர்தலை நடத்தும் நோக்கத்தில் நடைபெறும் தேர்தல்களிலும், இடைத்தேர்தல்களிலும், தபால் ஓட்டுகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ளது''.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாக்குச் சாவடிக்கு செல்ல முடியாத அளவுக்கு உடல் நிலை உள்ளவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைப் பெறுவதுதான் இந்த வசதியின் நோக்கம். உடல்நிலை பாதிக்கப்பட்ட பல வாக்காளர்களுக்கு இந்த வசதி பலனளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரும் வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்களிக்கத் தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது

Similar News