அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டால் தினமும் இலவச டோனட்!

Update: 2021-03-25 12:07 GMT

அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் கடையான கிரிஸ்பி கிரெம், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, 2022 ஆம் ஆண்டு வரை தினமும் டோனட் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது உணவு பிரியர்களை அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபின், தற்போது அமெரிக்காவில் மெல்ல, மெல்ல பலியானோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, மக்களுக்கு போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் கடை ஒன்று, நூதன பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது. அது நெட்டிசன்களையும் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.


அமெரிக்காவில் உள்ள கிரிஸ்பி கிரெம் ஸ்வீட் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, அதற்கான அட்டையை காண்பிக்கும் நபர்களுக்கு, இலவசமாக டோனட் ஒன்று வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மட்டுமல்லாமல், 2022ஆம் ஆண்டு வரை, தினமும் அட்டையை காட்டி டோனட்டை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் இதில் ஆச்சரியம்.



லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதியான பர்பாங்கில், கடந்த திங்கள் கிழமை தடுப்பூசி போடுக்கொண்ட 32 வயதான டே கிம், "நான் செய்தியைக் கேட்டபின் நேராக கிறிஸ்பி கிரெமுக்கு வந்தேன்" என்று கூறினார். இதுகுறித்து தெரிவித்துள்ள கிரிஸ்பி கிரெம் நிறுவனம், இதனால் நாங்கள் அதிக டோனட்ஸ் செய்ய வேண்டியது வரும். எங்களால் கொடுக்க முடிந்தவரை, நாங்கள் மகிழ்ச்சியாக கொடுப்போம். ஏனென்றால் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என நாம் அனைவரும் விரும்பியதை நெருங்கி வருகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News