தமிழர் திருவிழாவுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த அமித் ஷா!

Update: 2021-03-28 06:35 GMT

பங்குனி உத்திர நன்னாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் தமிழர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். இன்று பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் "தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான 'பங்குனி உத்திரம்' திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்! " என்று பதிவு செய்துள்ளார்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கே வாழ்த்து தெரிவிக்காத திமுக தலைவர்கள் இப்போது ஓட்டுக்காக கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்குனி உத்திரத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது யார் உண்மையிலேயே தமிழ் மக்கள் மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Similar News