இந்துக்கள் சூரியனையும் பசுக்களையும் வழிபடக் கூடாது - நாகை வேட்பாளரின் உண்மை முகம்!
திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்து விரோதப் போக்கு கொண்டவை என்பது அனைவரும் அறிந்ததே. விசிக தலைவர் திருமாவளவன் "சனாதனத்தை வேரறுப்போம்" என்ற பெயரில் மாநாடு நடத்தி இந்து மதத்தை அழிக்க உறுதி பூண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார் என்பதையும் மறந்து விடக் கூடாது. இந்தத் தேர்தலில் தீவிர இந்து விரோத மனப்பான்மைக்கும் செயல்களுக்கும் பரிசளிக்கும் வகையில் திமுகவும் சரி அதன் கூட்டணிக் கட்சிகளும் சரி சிலருக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளன.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலன் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே அளவு இந்து விரோத போக்கு கொண்ட வி.சி.க.வைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாசும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் போட்டியிடும் இவர் "இந்துக்கள் சூரியனையும் பசுவையும் வணங்கி பொங்கல் கொண்டாடுவது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சங்கடமாக இருப்பதாகவும் எனவே இந்து சடங்குகளை கைவிட்டு சூரியனையும் பசுவையும் உள்ளிட்டவற்றை வணங்காமல் இந்துக்கள் பொங்கல் கொண்டாடினால் தமிழர்கள் என்றும் தமிழ் பண்டிகை என்றும் தாங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக இருக்கும்" என்று முன்னர் பேசியிருந்தார்.
இந்துக்கள் பொங்கலன்று சூரியனையும் பசுவையும் வழிபடுவதால் 'ஏக இறைவன்' என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் ஆபிரகாமிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு பொங்கலை தமிழர் பண்டிகை என்று ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனவே இந்த வழக்கமும் இந்து சடங்குகளும் பொங்கலில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் அது தமிழர்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.