'மிஸ்டுகால் கொடுத்தால் கோவிலை விடுவித்து விடலாமா'? - என்ற கேள்விக்கு சத்குருவின் பதிலடி!

Update: 2021-04-03 08:24 GMT

மிஸ்டு கால் கொடுத்தால் கோவில் எல்லாம் அறநிலையத்துறையிடம் இருந்து மீட்டெடுத்து விடலாமா என்ற கேள்விக்கு ஈஷா சத்குரு ஜக்கி வாசுதேவ் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

'கோவில் அடிமை நிறுத்து' என்ற ஹஸ்டக் சமூகவலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் பிரச்சாரத்திற்கு இதுவரை மூன்று கோடிப் பேர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்னிலையில் நடிகர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஈசா சத்குரு ஜக்கி வாசுதேவிடம் மிஸ்டு கால் கொடுத்தால் கோவில் அறநிலையத் துறையிடம் இருந்து மீட்டெடுத்த விடலாம் என்பது மணி அடித்து கை தட்டினால் கொரோனா போய்விடும் என்பது போல் உள்ளது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.




அதற்கு பதிலளித்த ஜக்கிவாசுதேவ் "கைதட்டினால் மணி அடித்தால் கொரோனா போய் விடும் என்று யாரும் கூறவில்லை. நீங்கள் எங்கிருந்து கற்பனை செய்துகொண்டு இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றால் கொரோனாவை கட்டுபடுத்த முடியாது.அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லாததால் கொரோனா அதிகரித்து அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டது. எனவே கை தட்டியதாலும் விளக்கு ஏற்றியதாலும் கொரோனா போகவில்லை. நமக்குள் ஒரு ஒற்றுமையும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றுதான் பிரதமர் அவ்வாறு செய்ய வலியுறுத்தினார். அந்த ஒற்றுமையின் காரணமாக தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் கோவில் தொடர்பாக தங்களின் கோரிக்கையை மிஸ்டு கால் மூலம் தெரிவிக்கும்போது அனைத்து கட்சிகளும் அதனை பரிசீலனை செய்யும் என்றுதான் மிஸ்டுகால் கொடுக்க செய்தோம்" என்று அவர் தெரிவித்தார். கைதட்டினால் விளக்கு ஏற்றினால் கொரோனா போய்விடும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தி.மு.க.வின் உடன்பிறப்புகள் பொய்யான செய்தியை பரப்பி வந்த நிலையில் அதற்கு தக்க பதிலடியை ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.


3 கோடி பேர் கோவில் அடிமை நிறுத்து என்ற பிரச்சாரத்திற்கு ஆதரவாக மிஸ்டு கால் கொடுத்து இருப்பது தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளதால் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொண்டு இதுபோல் பொய்யான குற்றசாட்டுகளை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News