பாதுகாப்பு ஒப்பந்தம்!! இந்தியக் கடலோர காவல்படை மற்றும் கடற்படைக்கு புதிய ஆயுதங்கள்!!
By : Bharathi Latha
Update: 2026-03-05 06:36 GMT
இந்தியக் கடலோர காவல்படை மற்றும் கடற்படைக்கு ரூ.5,083 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியக் கடலோர காவல்படைக்கு 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் ரூ.2,901 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். இந்த ஹெலிகாப்டர்கள் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும்.
இந்தியக் கடற்படைக்கு தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை அழிக்கவல்ல ஷெட்டில் ஏவுகணைகள் ரூ.2,182 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படும். இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் ஜெஎஸ்சி ரோசாபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்திடமிருந்து பெறப்படும்.