தமிழக கோவில்களை விடுவிக்க கோரி தேசிய அளவில் ட்விட்டர் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்த கோவில் அடிமை நிறுத்து இயக்கம்!
கோவில் அடிமை நிறுத்து இயக்கத்தை ஆதரித்து பொது மக்கள் பலர் இன்று (04-04-2021) ட்விட்டரில் பல்வேறு பதிவுகளை பகிர்ந்தனர். அது தேசிய அளவில் டிரண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.
சமூக வலைத்தளங்கள் மக்களின் விருப்பங்களையும், கருத்துகளையும் பதிவு செய்யும் களமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று ட்விட்டரில் பொது மக்கள் பலரும் இவ்வியகத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவில்அடிமைநிறுத்து (#FreeTNTemples & #PeopleHaveSpoken) என்ற ஹாஷ்டேகுகளை டிரெண்ட் செய்தனர். இது தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இலட்சகணக்கான மக்கள் தொடர்ந்து அவர்களின் வேதனைகளையும், உணர்வுகளையும் பதிவு செய்து வந்தனர்.
இவ்வியக்கம் தொடர்பாக சத்குரு ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் "3 கோடி மக்கள் தங்களுக்கு நியாயப்படி சொந்தமானதை ஆணித்தரமாக கேட்டுள்ளனர். நம் தமிழ் கோவில்களை காத்து, புனரமைப்போம். அரசியலமைப்புச் சட்டப்படி என் உரிமையை எனக்கு மீட்டுக்கொடுத்து, கோவில்களை விடுவிப்பவருக்கே என் ஓட்டு." என்று குறிபிட்டுள்ளார்.
மேலும் வீடியோ பதிவில் அவர் "தமிழ் மண்ணில் பிறந்த அனைவரும் கோவில்களை விடுதலை செய்ய உறுதி ஏற்க வேண்டும். நம் கோவில்கள் அனைத்தும் உயிரோட்டமாகவும், மகத்தான கொண்டாட்டமாகவும், நம்முடைய ஆன்மீகத்திற்கும், முக்திக்கும் ஒரு வழியாக உருவாக்கிட வேண்டும்.