ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்.!குப்பை, கூளங்களால் சூழப்பட்டு சொத்துக்களை இழந்து தவிக்கும் அவலம்.!

Update: 2021-04-11 01:00 GMT

சென்னை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிசூலம் மலையில் இருக்கும் சிவன் கோவிலை சுற்றி குப்பைகள் கொட்டி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சென்னை விமான நிலையம் அருகே திரிசூலம் மலையில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருக்கிறது.


முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருப்பதாகவும் கோவில் நிலங்களை பட்டா போட்டு கூவிக்கூவி விற்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மின் வாரிய அலுவலர்கள் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டு, காலியாக இருக்கும் இடத்திற்கு கூட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டதாகவும் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமாக சுமார் 70 எக்கர் பட்டா நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இவை அனைத்துமே உள்ளூர் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அரசாங்க அதிகாரிகள் என அனைவரும் சேர்ந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் 2019ஆம் ஆண்டு புகார் எழுந்தது. ஏற்கனவே இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த கோவில் அருகே தற்போது சுற்றுப்புறத்தில் குப்பைகள் கொட்டி கோவிலை அசுத்தப்படுத்துவதாக சமூக வலைத்தளத்தில் இந்து மக்கள் கட்சி பதிவு செய்துள்ளது.

எனவே அப்பகுதியை சமூக ஆர்வலர்கள் உதவியுடன் அந்த குப்பையை அகற்றி கோவிலை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கோவிலைச் சுற்றி உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது, கோவிலில் உள்ள சிறப்பு அம்சங்களை பாழ்படுத்துவது என்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதை நாம் அன்றாட செய்திகளில் பார்த்து வருகிறோம். எனவே இத்தகைய முயற்சிகளை முறியடிக்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாக முன்வந்து கோவில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

Similar News