அரசு நிலத்தில் தேவாலயம் கட்டும் பணி - தாசில்தாரிடம் புகார்!

Update: 2021-04-12 07:24 GMT

ஓசூரில் அரசு நிலத்தில் தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.





ஓசூரில் அண்ணாமலை நகரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தேவாலயம் கட்டுவதற்கு கடந்த 2000 ஆவது ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது அரசு நிலத்தில் தேவாலயம் கட்டக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் 2000 ஆவது ஆண்டே தேவாலயம் கட்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் தற்போது அந்த தேவாலயம் கட்டும் பணி மீண்டும் துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கட்டுமான பணிக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த பகுதியில் தேவாலயம் கட்டும் பணி நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் சார்பில் தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் கட்டுவது சட்டவிரோதமான செயல் என்று தடுத்து நிறுத்தப்பட்ட கட்டுமான பணியை மீண்டும் தொடங்கி உள்ளதற்கான காரணம் என்ன, மாவட்ட ஆட்சியர் தடை விதித்த ஒரு கட்டுமான பணியை மீண்டும் தொடங்குவதற்கு யாரிடம் அனுமதி பெற்றனர் என்பது போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.

Similar News