இந்தியாவில் கொரோனா 2 வது அலை: எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் அளித்த தகவலால் அதிர்ச்சி!

Update: 2021-03-18 11:35 GMT

கொரோனா 2வது அலையில் இந்தியா உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் இந்தியாவை கொரோனா தொற்று முழு நாட்டையும் ஆட்டிப்படைத்தது. குறிப்பாக ஊரடங்கு மூலம் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே ஸ்தம்பித்து விட்டது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தொற்று குறைந்து வரும் நிலையில், மேலும் இரண்டாம் அலை வீசத் தொடங்கியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தற்போது இந்தியாவில் மேலும் 35 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 172 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 300க்கு மேல் இருந்த பாதிப்பு 900க்கும் மேல் தாண்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா 2வது அலையில் இந்தியா உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.


 இது குறித்து பேசிய அவர், 2021ஆம் ஆண்டில் இந்தியா கொரோனா இரண்டாவது அலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கு நாம்தான் காரணம், சரியான வழிமுறைகளை பின்பற்றாததே காரணம் என்றும், தினமும் 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால்தான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என கூறினார். மேலும் அனைத்து மக்களும் தானாகவே முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டும் தான் இதை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

Similar News