பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகன தயாரிப்பாளர்களுக்கு 4.6 பில்லியன் டாலர் சலுகை வழங்க இந்தியா திட்டம்!

Update: 2021-02-28 10:50 GMT

மத்திய அரசு தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாட்டைக் ஊக்குவிப்பதற்காக, மேம்பட்ட பேட்டரி மூலம் இயங்கும் வாகன உற்பத்தி வசதிகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு சுமார் 4.6 பில்லியன் டாலர் சலுகைகளை வழங்க தற்போது இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைக் ஊக்குவிக்கவும், பெட்ரோல், எண்ணெய் போன்றவற்றை பயன்பாட்டை குறைக்கவும் அரசு முயல்கிறது. இந்த திட்டத்தை NITI ஆயோக் தயாரித்துள்ளது. இது வரும் வாரங்களில் மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப்படும்.


அரசாங்க முன்மொழிவின் படி, மின்சார வாகனங்கள் அனைத்து தரப்பு மக்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், 2030 ஆம் ஆண்டில் இந்தியா தனது எண்ணெய் இறக்குமதி பில்களை சுமார் 40 பில்லியன் டாலர்களாக குறைக்க முடியும். மேம்பட்ட பேட்டரிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, 2030 ஆம் ஆண்டில் 4.6 பில்லியன் டாலர் ஊக்கத்தொகையை தர வேண்டும் திங்க் டேங்க் கமிட்டி பரிந்துரைத்தது. அடுத்த நிதியாண்டில் 9 பில்லியன் ரூபாய் (122 மில்லியன் டாலர்) ரொக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஊக்கத்தொகைகளுடன் தொடங்கி, அது ஆண்டுதோறும் மதிப்பிடப்படும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு தொழிலில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவும் மற்றும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் தொழிலில் முதலீடு செய்யும் அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் உட்பட சில வகையான பேட்டரிகளுக்கு அதன் இறக்குமதி வரி விகிதத்தை 2022 வரை தக்க வைத்துக் கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால் பின்னர் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அதை 15% ஆக உயர்த்தும் என்று அந்த ஆவண அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால், எண்ணெய்க்காக இந்தியா பிற நாடுகளைசார்ந்து இருப்பதை குறைப்பதற்காகவும் மற்றும் மாசுபாட்டின் அளவை குறைப்பதாக இருந்தால் கண்டிப்பாக நாம் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் மற்றும் மேம்பாட்டிற்கும் சில உள்கட்டமைப்பு வசதிக்காக ரீசார்ஜ் நிலையங்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஒரு கணக்கெடுப்பின்படி வழக்கமான கார்களின் விற்பனை உடன் ஒப்பிடும் பொழுது, உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மின்சார கார்களின் விற்பனை சுமார் 3,400 மட்டும்தான் ஒரு வருடத்திற்கு என்று அந்த அறிக்கை முடிவு கூறியிருந்தது.

இந்த கொள்கை பேட்டரி தயாரிப்பாளர்களுக்கும், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா போன்ற இந்தியாவில் E.V.க்களை உருவாக்கத் தொடங்கியுள்ள வாகன உற்பத்தியாளர்களுக்கும் பயனளிக்கும். 2030 க்குள் எத்தனை மின்சார கார்கள் சாலையில் இருக்கும்? என்று அது மதிப்பிடவில்லை. அரசாங்க மானியங்களின் ஆதரவுடன் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கு ஐந்து ஆண்டுகளில் நிறுவனங்களுக்கு 6 பில்லியன் டாலர் செலவாகும் என்று இந்த திட்டம் மதிப்பிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News