இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 84.71 சதவீதம் பேர் குறிப்பிட்ட 6 மாநிலங்களில் மட்டுமே உள்ளனர்!

Update: 2021-03-09 04:12 GMT

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,711 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.71 சதவீதம் பேர் , மேலே கூறப்பட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 10,187 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 2,791 பேருக்கும், பஞ்சாப்பில் 1,159 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் நிலவரங்களை மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப்பில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1.84 லட்சமாக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.65 சதவீதமாகும். 

2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவர்களில் 69,82,637 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள், 35,42,123 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர்கள், 65,85,752 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள், 2,11,918 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்கள். 4,76,041 பேர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள். 31,23,873 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

50வது நாளான்று 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர், கொவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Similar News