150 நாடுகளில் இந்தியாவின் தடுப்பூசி பயன்படுகிறது: மத்திய அமைச்சர் பெருமிதம்!

Update: 2021-03-13 12:00 GMT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஊசி மருந்து 150 நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது என திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பின்னர் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதம் கொடுத்து வேத ஆசீர்வாதம் செய்து மரியாதை செலுத்தினர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பியூஷ் கோயல், இந்தியா தயாரித்த தடுப்பூசி 75 நாடுகளில் உள்ள மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. அதேபோல் இந்தியா முழுவதும் 135 கோடி மக்களுக்கு அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையை பார்த்து மற்ற நாடுகளும் இந்தியாவில் தைரியத்துடன் இருக்கிறார்கள். இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மற்ற நாடுகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது நம் அனைவருக்கும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.


கடந்த ஆண்டைவிட ரயில்வே துறையில் சரக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கொரோனா காலகட்டத்திலும் கூட ரயில்வே துறையின் சரக்கு ஏற்றுமதி எந்த தடையும் இல்லாமல் நடைபெற்று வந்தது பார்க்க வேண்டிய ஒரு விஷயம். திருப்பதியில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனை சர்வதேச ரயில் நிலையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயில் தெரிவித்தார்.

Similar News