நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 40 அடி கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
Image : Omanorama