சென்னையில் வரும் வெள்ளி மற்றும் சனியில், இலக்கியத் திருவிழா: பெரும் ஆளுமைகள் பங்கேற்பு! #ChennaiLitFest
"எண்ணங்களும் வண்ணங்களும்" என்ற தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு இலக்கியத் திருவிழா மார்ச் 26,27 வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சென்னை T.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடைபெறவுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அழைப்பில், "தமிழ் இலக்கிய உலகில் ஒரு புது முயற்சியாக இந்த வருடம் சென்னை இலக்கிய விழா கொண்டாடப்படவுள்ளது. இது நாள் வரை பொது ஜனங்களின் கண் பார்வையில் அதிகம் தெரியாத பல ஆளுமைகளை மூத்த இலக்கியவாதிகளும், அறிவு ஜீவிகளும் பத்திரிக்கையாளர்களும் அறிமுகம் செய்து வைப்பார்கள்.
இவ்விழா இண்டோய் அனலிடிக்ஸ் எனப்படும் ஒரு அறிவு சார் இயக்கத்தால் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 26, 27 2021, சென்னை தியாகராய நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில்நடைபெறவுள்ளன.
இரண்டு தனி நிகழ்ச்சிகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நடை பெறவுள்ளன. தமிழில் கலந்து கொள்வோர் - சிறந்து இலக்கிய ஆளுமையும் நாவலாசிரியருமான திருமதி சிவசங்கரி, இந்த தலைமுறையின் மிக முக்கியமான எழுத்தாளரான திரு சாறு நிவேதிதா, மூத்த ஊடக இயல் ஜாம்பவான் திரு மாலன், கீழாம்பூர் திரு சங்கர சுப்ரமணியம், பேரா. சுப்ரமணியம், 'திராவிட மாயை' சுப்பு மற்றும் இந்தியாவின் தலை சிறந்த பத்திரிக்கையாளர்கள் பிரபுல்லா கேத்கர், திரு சுனில் ஆம்பேகர், எழுத்தாளர் ஜடாயு, திரு சந்தீப் பாலகிருஷ்ணா, 'வித்யா தபஸ்வி' நெய்வேலி சந்தானகோபாலன் மற்றும் பல பெரும் ஆளுமைகள் பங்கு பெறவுள்ளன. அனைத்து தரப்பு மக்களுக்கும் இது இலவச நிகழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு சிறப்பு விருந்தினராக திரு நல்லி குப்புஸ்வாமி செட்டி கலந்து கொள்கிறார். காலை 9.15-10 மணிக்கு குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்கும் விழாவில் ஆரம்ப உரையை சிறந்து இலக்கிய ஆளுமையும் நாவலாசிரியருமான திருமதி சிவசங்கரி நிகழ்த்துவார். வரவேற்புரை பேராசிரியர் வா.வே.சுப்ரமணியனால் நிகழ்த்தப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இது இலவச நிகழ்ச்சி. சென்னை மக்கள் கலந்து பயனடையலாம்.