கொரோனா வைரஸ் பிறப்பிடம் பற்றி அமெரிக்கா பகிரங்க தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இன்னும் இந்த கொரோனா தொற்றில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சீனா நாட்டில் தான் முதன் முதலில் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். அதற்கு பின்னர் தான், இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணாமாக உலகில் உள்ள பல நாடுகள், சீனா வேண்டுமென்றே இந்த கொரோனா வைரஸை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பி இருக்கும் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் அமெரிக்க குடியரசு கட்சியின் பாராளுமன்ற வெளியுறவு குழு பிரதிநிதி கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த ஆய்வு அறிக்கையில் "கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை மாறாக அது, வூஹான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் கொரோனா வைரசை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்துள்ளன.
இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸ், 2019 செப்டம்பர் 12 க்கு முன்பாகவே வூஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான சாட்சியங்கள் உள்ளன. வூஹான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம், சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
ஆய்வகம் செயல்படத் துவங்கி இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொடிய கொரோனா வைரஸ் அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Source: Daily Thanthi
Image Source: Daily Thanthi