மூன்றாம் அலை துவங்கிவிட்டதா? - எச்சரிக்கும் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
கொரோனோ மூன்றாம் அலை துவங்கிவிட்டதா
தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனோ மூன்றாம் அலை துவங்கிவிட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் முழுவதும் ஒரு வார கால விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15 லிருந்து 21 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது" என்றார் அவர், தொடர்ந்து பேசிய அவர், "மார்க்கெட் பகுதிகள் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்களை கவரும் வகையிலான பிரச்சார உக்திகளை கையாள உள்ளோம்" என்றார்.
"ஒரு வேளை மூன்றாம் அலை வந்தாலும் 25 விழுக்காடு படுக்கைகள் குழந்தைகளுக்கு என சிறப்பு வசதிகள் நோய் தடுப்பு உக்திகள் மேற்கொள்ளபட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசு தொற்று தடுப்பு தொடர்பாக அளிக்கப்பட்டு வரும் அனைத்து வழிகாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகிறோம். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
Image Courtesy : The Hindu