அரசுக்கு சொந்தமான இடத்தில் CHURCH, வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மூங்கில்துறைப்பட்டு அருகே சர்ச் அனுமதியின்றி கட்டப்பட்டதை அடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அதை இடித்தனர்.

Update: 2021-08-03 08:12 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவலூரீலில் வசித்து வந்த அந்தோணிசாமி என்பவர் அரசாங்கத்திடம் அனுமதியின்றி சர்ச் கட்டினார். இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பகுதி மக்கள், அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச் குறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 5ம் தேதி இந்த சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் அந்த இடத்தில  சர்ச் கட்டுமானப் பணியை நிறுத்த சொல்லி சம்பந்தப்பட்டவரிடம்  உத்தரவிட்டார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் அந்த இடத்தில சர்ச் கட்டும் பணிகளை நிறுத்தாமல், தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு நடத்தினர்.     

அப்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மலையில் சர்ச் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில், தாசில்தார் சையத் காதர் அவர்கள்  முன்னிலையில் ஜே.சி.பி. மூலம் அரசுக்கு சொந்தமான இடத்தில கட்டப்பட்டிருந்த சர்ச் இடித்து அகற்றப்பட்டது. மேலும் சர்ச் இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த 32 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


Source:Dinamalar

Image Source: Dinamalar


Tags:    

Similar News