BREAKING NEWS : 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை !

Breaking News.;

facebooktwitter-grey
Update: 2021-09-12 04:06 GMT
BREAKING NEWS : 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை !

வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது. இதனால் இன்று (ஞாயிற்று கிழமை) காலை தொடர்ந்து மழை பொழியும் என தெரிவித்து உள்ளது.

இந்த மழையானது, டெல்லி-என்.சி.ஆர்., பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலும் பெய்யும். ஆச்சரியப்படும் வகையில் கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில், டெல்லியில் 24 மணிநேரத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது.

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது. கடந்த 1975ம் ஆண்டுக்கு பின்பு (1155 மி.மீ.) டெல்லியில் கடந்த 4 மாதங்களில் 1139 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

டெல்லி விமான நிலையம் உள்பட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

Image : Hindustan Times.

Maalaimalar

Tags:    

Similar News